இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங். இவர் கடந்த 2004 முதல் 2009 ஆம் ஆண்டு வரையிலும் 2009 முதல் 2014 வரையிலும் இந்தியாவின் பிரதமராக இருந்துள்ளார். இவருக்கு தற்போது 92 வயது ஆகிறது. இந்நிலையில் மன்மோகன் சிங்குக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். நேற்று இரவு 9.51 மணிக்கு அவரது உயிர் பிரிந்ததாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. அவரது இறப்பிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறந்ததால் அரசு மரியாதையுடன் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் உடல் அடக்கம் செய்யப்படும். 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது இன்று (27.12.2024) அரசு நிகழ்வுகள் அனைத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. மத்திய அமைச்சரவை நாளை காலை 11 மணிக்கு மன்மோகன் சிங் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.
0 Comments