தாய்லாந்தில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு போதைப்பொருள் கடத்தி வரப்படுவதாக மத்திய புலனாய்வு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் பாங்காக்கில் இருந்து வந்திறங்கிய பயணிகளிடம் விமான நிலைய அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
அப்போது சென்னையை சேர்ந்த பயணி ஒருவரின் உடைமையை மோப்பம் பிடித்த மோப்பநாய் சத்தம் எழுப்பியது. இதையடுத்து, அவர் கொண்டு வந்த பையை அதிகாரிகள் சோதனை செய்தபோது அதில் உயர்ரக கஞ்சா போதைப்பொருட்கள் இருந்தது தெரிய வந்தது. அவரிடம் இருந்து சுமார் ரூ.7.5 கோடி மதிப்பிலான போதைப்பொருளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அந்த நபரை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
0 Comments