துபாயில் சல்வா மியூசிக் குழுவினர் நடத்திய ரஜினிகாந்தின் 75வது பிறந்தநாள் கொண்டாட்டம்

 


துபாய், ஐக்கிய அரபு அமீரகதில் சல்வா குரூப்  நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் சல்வா லைட் மியூசிக் நிறுவனர்  முனைவர் பகவதி ரவி தலைமையில் நடைபெற்ற "நடிகர் ரஜினிகாந்த்தின் 75வது பிறந்தநாள் கொண்டாட்டமும்" ரஜினிகாந்த்தின் நடித்த படத்தில் இருந்து 50 பாடல்களின்  இசை நிகழ்ச்சியும்  துபாய் ஜூமைரா  பகுதியில் உள்ள எமிரேட்ஸ் அறங்கில் சல்வா குரூப் நிறுவனங்களின் நிறுவனர் டாக்டர் பகவதி ரவி தலைமையில் ஆர்ஜே ரோபினா தொகுத்து வழங்க சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக  பாடகர் மலேசியா வாசுதேவனின் மகனும் நடிகைருமான யுகேந்திரன், நடிகர் ராஜேஷ், நடிகர் சுப்பு பஞ்சு அருணாசலம், மிமிக்கிரி புகழ் லொள்ளு சபா நடிகர் ஜீவா, தொலைக்காட்சி நடிகர் டாக்டர் கமலேஷ், சீரியல் நடிகைகள் பிரியதர்சினி, ஹரிப்ரியா, பாடகர் ரபீ மனோ, சூப்பர் சிங்கர் அபர்ணா உள்ளிட்ட சினிமா துறையினர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் இந்நிகழ்ச்சியில்  சல்வா மியூசிக் குழுமத்தின் ஆசியா புக் சாதனை படைத்த  ஆண், பெண் பாடகர்களான அமீரக மலேசியா வாசுதேவன் என்று அழைக்கப்படும்  சல்வா மியூசிக் நிறுவனர் பகவதி ரவி, அஜய், கோகுல் பிரசாத், வள்ளி ரவி, மிருதுளா ரமேஷ், சரண்யா, ஜனனி, வாசிம் மற்றும் பர்ஹான் ஆகியோரின் பாடல் இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக, ஸ்பிரேட் ஸ்மைல்ஸ் நிறுவனர் மக்கள் ஆர்ஜே சாரா,  முத்தமிழ் சங்கம் தலைவர் ஷா,  சேர்மன் ராமசந்திரன், தமிழக குரல் நாளிதழ் தொலைக்காட்சி சேவையை பாராட்டி விருது வழங்கப்பட்டது. மக்கள் நேரம் இணைய தள  வளைகுடா முதன்மை நெறியாளர் kamslkvl, GV ப்ரோடக்சன் பிரசாத், UTS ரமேஷ்,  ஹோப் நிறுவனர் கௌசர்,   தினக்குரல் வணக்கம் பாரதம் வாரஇதழ் இணை ஆசிரியருமான நஜீம் மரிக்கா, முத்தமிழ் சங்க நிர்வாகிகள், சுரேஷ், பாளையங்கோட்டை ரமேஷ், கள்ளக்குறிச்சி சின்னா, வணக்கம் பாரதம் வளைகுடா நிருபர் தஸ்லீம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் சிறப்பாக பாடிய அணைத்து சல்வா மியூசிக் குழுவின் பாடகர்கள் அனைவருக்கும் சல்வா குருப் நிறுவனத்தின் நிறுவனர் டாக்டர் பகவதி ரவி  தங்க நாணயங்கள் கொடுத்து கௌராவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சிவன் மூர்த்தி

Post a Comment

0 Comments