தொடர் மழையின் காரணமாக வரத்து குறைவு...... ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.7500-க்கு விற்பனை

 


தமிழகத்தில் நேற்று கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு பூக்களின் விலை கடுமையாக உயர்ந்தது. இதைத்தொடர்ந்து இன்று இரண்டாவது நாளாகவும் பூக்கள் விலை கிடு கிடுவென உயர்ந்துள்ளது. அதன்படி தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் உள்ள மலர் சந்தையில் ஒரு கிலோ மல்லி பூ கிலோ 7500 வரையில் விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோன்று கன்னியாகுமரியில் உள்ள தோவாளை மலர் சந்தையில் ஒரு கிலோ மல்லி பூ 4000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தொடர் மழையின் காரணமாக வரத்து குறைந்துள்ளது. அதே சமயத்தில் நாளை இந்த வருடத்தின் கடைசி முகூர்த்த நாள். மேலும் இதன் காரணமாகத்தான் பூக்களின் விலை அதிக அளவில் உயர்ந்துள்ளது.

Post a Comment

0 Comments