பொன்னேரியில் முழுநேர கிளை நூலகம் சார்பில் 75 ஆவது தேசிய நூலக வார விழா....


திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரியில் தமிழ்நாடு அரசு பொது நூலக இயக்கம்,திருவள்ளூர் மாவட்ட நூலக ஆணைக்குழு,பொன்னேரி முழுநேர கிளை நூலகம் சார்பில் முப்பெரும் விழா தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.

பொன்னேரி வாசகர் வட்ட தலைவர் பா.ஜோதீஸ்வரன், துணைத் தலைவர் வெல்டன் வாசகர் தலைமையில் நடைப்பெற்ற 57 வது தேசிய நூலக வார விழா,மாவட்டத்திலேயே சிறந்த வாசகர் வட்ட தேர்வு, நூலகத் தந்தை எஸ்ஆர்.ரங்கநாதன் நல் நூலக விருது வழங்குதல் உள்ளிட்ட மூன்று நிகழ்ச்சிகளை கொண்டு நடைபெற்ற முப்பெரும் விழாவில் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகர் கலந்துகொண்டு புத்தக கண்காட்சியை துவக்கி வைத்து,புரவலர் பட்டயம் வழங்கி,பள்ளி மாணவர்களுக்கு பரிசளித்து,வாழ்த்துரை வழங்கினார்.

இதில் நகராட்சி துணைத் தலைவர் .விஜயகுமார், திமுக நகர செயலாளர் வழக்கறிஞர் ரவிக்குமார் தொழிலதிபர்.ஜி.வி.என்.குமார்,திமுக மாவட்ட துணை செயலாளர்.கதிரவன்,நக்கீரன்,சக்கில் முகம்மது,புலவர் கோபாலகிருஷ்ணன்,இராதாகிருஷ்ணன்,சிவலிங்கம்,தூயவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.பொன்னேரி தமிழாலயா இலக்கிய அமைப்பு பொன்.தாமோதரன், நிகழ்ச்சி தொகுத்தார்.வாசகர் வட்ட பொருளாளர் இரவிச்சந்திரன் நன்றி கூறினார்.நூலகர்கள் தியாகராஜன்,ஷோபனா, முருகன்,ரவி ஆத்தி மாலை ஜெயச்சந்திரன்.ஆகியோர் நிகழ்ச்சி ஒருங்கிணைத்தனர். பள்ளி மாணவர்கள் பேச்சு போட்டி நடைபெற்றது அவர்களுக்கு நூலகம் சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டது நூலக வாசகர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments