வாட்சப்பில் வந்த மெசேஜ்..... ரூ. 7.44 லட்சத்தை இழந்த நிதி நிறுவன உரிமையாளர்

 


திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடத்தில் தங்கராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் நிதி நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த 8ம் தேதி, இவரது செல்போனுக்கு ஒரு புதிய எண்ணில் இருந்து குறுஞ்செய்தி வந்துள்ளது. அந்த எண்ணில் தங்கராஜ் வைத்துள்ள வங்கி கணக்கின் லோகோ மற்றும் பெயர் இருந்துள்ளது. மேலும் அந்த குறுஞ்செய்தியில் உங்களது வங்கி கணக்கில் KYC அப்டேட் செய்ய வேண்டும். அப்டேட் செய்வதற்கு இதுதான் கடைசி தேதி என்றும், அப்படி செய்யாவிட்டால் உங்கள் வங்கி கணக்கு முடக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

அப்டேட் செய்ய கீழே உள்ள லிங்க் மூலம் விவரங்களை பதிவு செய்யலாம் என்று ஒரு லிங்கையும் அனுப்பியுள்ளனர். இதைத்தொடர்ந்து அவர், இந்த குறுஞ்செய்தி வங்கியில் இருந்து தான் வந்துள்ளது என்று நினைத்துள்ளார். அதனால் அந்த லிங்கை கிளிக் செய்து தனது பெயர் மற்றும் பிறந்த தேதி உள்ளிட்ட விவரங்களை கொடுத்துள்ளார். சிறிது நேரத்தில் அவரது வங்கி கணக்கில் இருந்து 6 பரிவர்த்தனைகளில் 7.47 லட்சம் ரூபாய் எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் வங்கியை தொடர்பு கொண்டு கேட்டுள்ளார். அப்போது தான் இது ஒரு மோசடி என்பது தெரியவந்தது. அதன் பின்னர் வங்கி அவரது வங்கி கணக்கை பிளாக் செய்தனர். இதையடுத்து தங்கராஜ் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி சைபர் கிரைம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Post a Comment

0 Comments