திண்டுக்கல் தனியார் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து..... குழந்தை உட்பட 7 பேர் பலி

 


திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் மோசமான தீ விபத்து ஏற்பட்ட நிலையில், இந்த தீ விபத்தில் சிக்கி குழந்தை உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மருத்துவமனையில் நோயாளிகள் பலரும் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களை வேறு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் பணிகள் இப்போது நடந்து வருகிறது.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் நேற்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் திருச்சி சாலையில் இந்த தனியார் எலும்பு முறிவு மருத்துவமனை இயங்கி வருகிறது.

நேற்று இரவு 9 மணியளவில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கணினியில் மின்சார கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என சொல்லப்படுகிறது. இருப்பினும், உறுதியாக எதனால் தீ விபத்து என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.தீ விபத்து தீ விபத்து தொடர்பான தகவல் கிடைத்த உடன் தீயணைப்பு வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அவர்கள் தீயை அணைக்க போராடி வருகிறார்கள். இரண்டு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ள நிலையில், தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடி வருகிறார்கள்.

இதற்கிடையே தீ விபத்தில் சிக்கிய 7 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஒரு குழந்தை உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தீ விபத்தில் உயிரிழந்த அனைவருமே நோயாளிகளைப் பார்க்க வந்த உறவினர்கள் என்பதும் தகவல் வெளியாகியுள்ளது. இதில் 3 பெண்கள், ஒரு சிறுவன் உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இவர்கள் 7 பேரும் மருத்துவமனையில் அனுமதியான நோயாளிகளைப் பார்க்க வந்துள்ளனர். 4 மாடிகளைக் கொண்ட மருத்துவமனையான இதில் லிப்ட்டில் இவர்கள் இருந்துள்ளனர். அப்போதுதான் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதன் காரணமாக மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்ட நிலையில், லிப்ட் பாதியிலேயே நின்றுள்ளது. இதன் காரணமாகவே உயிரிழப்புகள் நடந்துள்ளன.தீ விபத்து குறித்த தகவல் கிடைத்த உடன் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து உதவியுள்ளனர். இதன் காரணமாகவே பெரும் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

 மருத்துவமனையில் அனுமதியான 50க்கும் மேற்பட்டோர் ஆம்புலன்ஸ் மூலம் வேறு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு வருகிறார்கள்.மருத்துவமனையில் சிலிண்டர், மருந்து என எளிதாக தீ பரவும் பொருட்கள் பல இருப்பதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. தீயணைப்பு வீரர்கள் மட்டுமே மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். தீ விபத்து குறித்த தகவல் கிடைத்த உடன் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி, ஆர்டிஓ சக்திவேல் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.

Post a Comment

0 Comments