தாய்லாந்தில் இருந்து தென்கொரியாவுக்கு சென்ற விமானம் இன்று தரையிறங்கும் போது லேண்டிங் கியரில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக பின்புற டயர் வெளியே வராமல் விபத்துக்குள்ளானது. டயர் வெளியே வராமல் ஓடுதளத்தில் விமானம் உரசி கொண்டே சென்றதால் புகை வெளிவந்த நிலையில் விமானத்தை நிறுத்த முடியாததால் ஒரு சுவர் மீது விமானம் பயங்கரமாக மோதியது.
பின்னர் அந்த விமானம் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இந்த விமானத்தில் சுமார் 181 பேர் ஊழியர்களுடன் சேர்த்து இருந்த நிலையில் 28 பேர் பலியானதாக தகவல் வெளிவந்தது. இந்த நிலையில் தற்போது பலி எண்ணிக்கை 62 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இரண்டு பேர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில் தொடர்ந்து மீட்பு பணிகள் என்பது நடைபெற்று வருகிறது.
0 Comments