அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட விசிக கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா தமிழ்நாட்டில் 2026 ஆம் ஆண்டு மன்னராட்சி முறை ஒழிக்கப்பட வேண்டும் எனவும் ஏற்கனவே பாஜகவை ஒழித்த நிலையில் அடுத்ததாக திமுகவை ஒழிக்க வேண்டும் எனவும் விஜய் களத்திற்கு வரவேண்டும் எனவும் கூறினார். அதோடு தமிழ்நாட்டில் 2026 ஆம் ஆண்டு கண்டிப்பாக கூட்டணி ஆட்சிதான் அமையும் என்றும் நாங்கள் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்பதில் என்ன தவறு என்று கூறினார்.
கூட்டணிக்கு எதிராக ஆதவ் அர்ஜுனா பேசியதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியினரே கூறிய நிலையில் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருமாவளவன் கூறியிருந்தார். இந்நிலையில் தற்போது ஆதவ் அர்ஜுனா மீது விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி அவரை கட்சியிலிருந்து 6 மாத காலத்திற்கு இடைநீக்கம் செய்துள்ளனர். அவர் கட்சியின் நலனுக்கு எதிராக செயல்பட்டதாக கூறிய அவர் மீது நடவடிக்கை எடுத்ததாக திருமாவளவன் கூறியுள்ளார். மேலும் இதோ அந்த அறிக்கை,
0 Comments