உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற குகேஷுக்கு ரூ.5 கோடி பரிசு...... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

 


உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை குகேஷ் வென்றுள்ளார். இவர் சீன வீரரை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை வென்றுள்ள நிலையில் பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள். குகேஷுக்கு 18 வயது ஆகும் நிலையில் அவருக்கு உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் வென்றதற்காக 11.45 கோடி ரூபாய் பரிசாக கிடைத்துள்ளது. அதன் பிறகு இன்று நடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரின் போது குகேஷை பாராட்டினர்.

இந்நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் குகேஷுக்கு தற்போது 5 கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். விஸ்வநாதன் ஆனந்துக்கு பிறகு உலக சாம்பியன்ஷிப் போட்டியை வென்ற தமிழன் என்ற பெருமையை குகேஷ் பெற்றுள்ளார். மேலும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் கோரிக்கையை ஏற்று அவருக்கு 5 கோடி ரூபாய் பரிசு தொகை வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Post a Comment

0 Comments