ராஜஸ்தான்: பெட்ரோல் பங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 பேர் பலி.....

 


ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்ப்பூர் அஜ்மீர் நெடுஞ்சாலையில் ஒரு பெட்ரோல் பங்க் அமைந்துள்ளது. இந்த பெட்ரோல் பங்க் அருகே இன்று காலை ஒரு ரசாயன லாரி ஒன்று பயங்கரமாக மோதியதில் பெரும் விபத்து ஏற்பட்டது. இதனால் பெட்ரோல் பங்க் தீப்பிடித்து எரிந்த நிலையில் அருகே உள்ள வாகனங்களும், மளமளவென எரிய தொடங்கியது.

இந்த விபத்தில் ஏராளமான வாகனங்கள் தீயில் எரிந்து சேதமான நிலையில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். அதன் பிறகு பத்துக்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தற்போது தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Post a Comment

0 Comments