தேனி மாவட்டம் கம்பம் அருகே மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில், சுருளிஅருவி அமைந்துள்ளது. பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமாகவும், ஆன்மீக தலமாகவும் உள்ள இந்த சுருளி அருவி பகுதிக்கு, தமிழ்நாடு மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம்.
இந்நிலையில் சுருளி அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான அரிசிப்பாறை, ஈத்தக்காடு, தூவானம் அணை பகுதிகளில் கடந்த வாரம் பெய்த கனமழையால், அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.இதனால் அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு, வனத்துறையினர் தடை விதித்திருந்தனர். இந்நிலையில் இன்று அருவியில் நீர்வரத்து சீரானதைத் தொடர்ந்து, 4 நாட்களுக்கு பிறகு சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. நான்கு நாட்களுக்கு பின்னர் அனுமதி அளிக்கப்பட்டதை தொடர்ந்து ஏராளமான பொதுமக்கள் அருவியில் குவிந்தனர்.
0 Comments