நாகூர் தர்கா 468 ஆம் ஆண்டு கந்தூரி விழாவை முன்னிட்டு நாகூர் முஸ்லிம் ஜமாத் தலைவர் எஸ்.ஷாகாமாலிம் தலைமையில் நாகூர் டெவலப்மென்ட் கமிட்டி தலைவரும்,தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநிலச் செயலாளருமான
ஏ.ஆர்.நௌஷாத் ஏற்பாட்டில் ஆஸ்கர் நாயகன் இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் சகோதரி ஏ.ஆர்.ரஹைனா இன்னிசை நிகழ்ச்சி (10.12.2024 ) இரவு சிறப்புடன் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் நாகப்பட்டினம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் வழக்கறிஞர் ஆர்.என்.அமிர்தராஜா சமூக பணிகளை பாராட்டி -சிறந்த சமூக சேவகர்’ விருதினை நீதிபதி கே.சீனிவாசன்,ஐ.என்.டி.யூ.சி தேசிய பொதுச் செயலாளர் அ.அமீர்கான்,தமிழ்நாடு அரசு முன்னாள் சிறுபாண்மையினர் ஆணைய உறுப்பினர் ஏ.பி.தமீம் அன்சாரி,நாகை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஜி.கே.நிஜாமுதின்,பிரான்ஸ் அமிருதீன் ஆகியோர்கள் முன்னிலையில் திரைப்பட பாடகி ஏ.ஆர்.ரஹைனா வழங்கினார்.
இன்னிசை நிகழ்ச்சியில் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவர்கள் நாகூர் எம்.என்.ரபீக்,எம்.ஜி.ஜலாலுதீன்,நாகப்பட்டினம் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் எஸ்.முகம்மது நத்தர் எம்.சி, மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் எஸ்.யூசுப் மாலிம்,நாகூர் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் எஸ்.சர்புதீன் மரைக்காயர்,திட்டச்சேரி நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் நிஜாமுதீன்,உள்ளிட்ட நாகூர் ஜமாத் நிர்வாகிகள் மற்றும் பொது மக்கள் பெருந்திராளாக பங்கேற்றனர்.
மக்கள் நேரம் நிருபர் மற்றும் நாகை மாவட்ட செய்தியாக ஜி.சக்கரவர்த்தி
0 Comments