திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த திருவேங்கடாபுரத்தில் ஐயப்ப சுவாமி விளக்கு பூஜை வெகு விமரிசையாக நடைபெற்றது. திருவேங்கடாபுரத்தில் உள்ள ஐயப்ப பக்தர்கள் சார்பில் ஆண்டு தோறும் மார்கழி மாதத்தில் திருவிளக்கு பூஜை நடைபெற்று வருகிறது.
ஊர்வல சுற்றுப்பாதையில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் புலி வாகனத்தில் ஐயப்ப சுவாமிகள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். விளக்கு பூஜையின் போது நடைபெற்ற இரவை பகலாக மாற்றிய வான வேடிக்கைகள் காண்போரை கண்கவர்ந்தது. கேரள பாரம்பரிய வாத்தியமான செண்டை மேளம் மற்றும் பக்தர்களின் சரண கோஷம் அனைவரையும் பரவசத்தில் ஆழ்த்தியது. இந்த திருவிளக்கு பூஜையில் திருவேங்கடாபுரம், வேண்பாக்கம், தடப்பெரும்பாக்கம், பொன்னேரி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு ஐயப்பனை தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. திருவிளக்கு பூஜையை முன்னிட்டு முன்னதாக ஆலய வளாகத்தில் கோ பூஜை, கணபதி பூஜை, மகா சங்கல்பம், 108 கலச பூஜை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. விளக்கு பூஜை கலந்து கொண்டு துவக்கி வைத்தார் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் ராஜா மற்றும் கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பான ஏற்பாடு செய்யப்பட்டது அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
0 Comments