அருணாசலேஸ்வரர் கோவிலின் கார்த்திகை தீபத் திருவிழா வரும் 13- ஆம் தேதி நடைபெறுகிறது. அன்றைய தினம் அதிகாலை 4 மணிக்கு கோவில் மூலவர் சந்நிதியில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை மீது மகா தீபமும் ஏற்றப்படுகிறது. மகா தீபத்தைக் காண சுமார் 40 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி பக்தர்களின் வசதிக்காக 4,089 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. சென்னை, பெங்களூரு, புதுச்சேரி உள்ளிட்ட இடங்களில் இருந்து இந்த சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments