சிக்கன் ரைஸ் சாப்பிட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் மருத்துவமனையில் அனுமதி
ஈரோடு மாவட்டத்திலுள்ள கருங்கல்பாளையம் பகுதியில் ராஜாஜி புரம் உள்ளது. இங்கு பிரபாகர் அமுதா தம்பதியினர் வசித்து வரும் நிலையில் இவர்களுக்கு நீலாம்பரி என்ற மகள் இருக்கிறார். இவர்கள் மூவரும் வயிற்று வலி காரணமாக நேற்று மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதாவது இவர்கள் ஒரு ஹோட்டலில் சிக்கன் ரைஸ் வாங்கி சாப்பிட்டதாகவும் அதன் பிறகு மறுநாள் கடுமையான வயிற்று வலியில் அவதிப்பட்டதாகவும் கூறியுள்ளனர். இவர்கள் கடந்த 21ஆம் தேதி வாங்கி சாப்பிட்ட நிலையில் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளனர்.
ஆனால் அவர்களுக்கு உடல்நலம் சரியாக அதனால் பின்னர் அரசு மருத்துவமனையில் சேர்ந்துள்ளனர். பின்னர் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட உணவகத்திற்கு சென்று சோதனை நடத்தியதில் சுகாதாரமற்ற முறையில் அந்த ஹோட்டல் இயங்கி வந்தது தெரிய வந்தது. அதோடு இந்திய உணவு பாதுகாப்பு தர ஆணையத்தின் அனுமதி இல்லாததும் தெரிய வந்தது. மேலும் எந்தவிதமான முறையான ஆவணங்களும் இல்லாததால் அந்த உணவகத்தை தற்காலிகமாக மூடி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
No comments