பக்கிங்காம் கால்வாய் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 3 வாலிபர்கள் பலி

 


விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மரக்காணம் சந்தை தோப்பு பகுதியில் சகோதரர்களான லோகேஷ்(24), விக்ரம்(22) சூர்யா(22) ஆகியோர் வசித்து வந்தனர். நேற்று மாலை அண்ணன் தம்பிகள் பக்கிங்காம் கால்வாயில் வலை விரித்து மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு லோகேஷ் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார். இதனை பார்த்ததும் அண்ணனை காப்பாற்றுவதற்காக விக்ரமும், சூர்யாவும் தண்ணீரில் குதித்தனர்.

இதனால் மூன்று பேருமே வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர். இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று நீண்ட நேர போராட்டத்திற்குப் பிறகு லோகேஷன் உடலை மீட்டனர். மற்ற இரண்டு பேரையும் தேடும் பணி நடைபெற்றது. தற்போது அவர்களும் சடலமாக மீட்கப்பட்டனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Post a Comment

0 Comments