இலங்கை கடற்படையினரால் தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிக்கப்படுவதாக குற்றம் சாட்டி கைது செய்யப்படும் சம்பவங்கள் தொடர்கதையாகிவிட்டது. இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இலங்கை சிறையில் இருக்கும் தமிழக மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி முதல்வர் ஸ்டாலின் தொடர்ந்து வலியுறுத்தி வருவதோடு மத்திய அரசுக்கு கடிதம் எழுதியும் வருகிறார்.
அந்த வகையில் மத்திய மற்றும் மாநில அரசுகளின் முயற்சியால் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த 37 மீனவர்கள் இலங்கை சிறையில் இருந்து சமீபத்தில் விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த 37 மீனவ குடும்பங்களையும் தமிழக வெற்றிக் கழகத்தினர் நேரில் சென்று பார்த்துள்ளனர். அவர்கள் அந்த மக்களுக்கு தேவையான அடிப்படை உதவிகளை வழங்கியதோடு அரிசி பாய் உள்ளிட்ட பொருட்களையும் வழங்கினார்கள். மேலும் இந்த சம்பவம் மீனவ கிராம மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்திய நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகளுக்கு அவர்கள் பொன்னாடை அணிவித் கௌரவப்படுத்தினார்.
0 Comments