கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கத்தில் உள்ள ஸ்ரீ ஐயப்பா சேவா சங்கம் சார்பில் 30 ஆம் ஆண்டு மகா திருவிளக்கு பூஜை நடைபெற்றது.திருவிளக்கு பூஜை ஒட்டி மகா கணபதி ஹோமம் மற்றும் பந்தக்கால் நிகழ்வு ஆரம்பாக்கம் ஸ்ரீ முக்தி விநாயகர் ஆலய வளாகத்தில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து ஐயப்ப சுவாமிகளுக்கு நெய் அபிஷேகம் மகா திருமஞ்சனம் நடைபெற்றது.அதனைத் தொடர்ந்து ஐயப்ப சுவாமிகளுக்கு மகா தீபாரதனை நடைபெற்றது. பின் பக்தர்களுக்கு பிரசாதம் விநியோகிக்கப்பட்டது.
தொடர்ந்து ஆரம்பாக்கம் நலட்ராயன்கண்டிகை பகுதியில் இருந்து காப்பு கட்டி விரதம் இருந்த 500க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் திருவிளக்கு ஏந்தி ஆரம்பாக்கம் ஜி.என்.டி சாலை மற்றும் பல்வேறு பகுதிகளில் சரண கோஷம் எழுப்பி ஊர்வலமாக வந்தனர். ஐயப்ப பக்தர்கள் திருவிளக்கு ஏந்தி முன்னால் செல்ல அவர்களைத் தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ஐயப்ப சுவாமிகள் திருவீதி உலா வந்தார்.
அதன் பின்னர் ஆரம்பாக்கம் ஸ்ரீ முக்தி விநாயகர் ஆலயம் முன் அம்பலம் அமைக்கப்பட்டு அதன் முன் மஹா திரு விளக்கு பூஜை நடைபெற்றது. நிகழ்வில் பங்கேற்ற திரளான ஐயப்ப பக்தர்கள் ஐயப்பன் பக்தி பாடல்களை பாடி பொது மக்களை உற்சாகப்படுத்தினர்.
ஆரம்பாக்கம் ஸ்ரீ ஐயப்பா சேவா சங்கம் சார்பில் நடைபெற்ற இந்த முப்பதாவது ஆண்டு திருவிளக்கு பூஜைக்கான ஏற்பாடுகளை ஆரம்பாக்கம் நல்லட்ராயன் கண்டிகை கிராம நிர்வாகிகள் ஆன இ.தசரத ரெட்டியார், எம்.குப்புசாமி முதலியார், ஏ.என்.பாலு செட்டியார், பி.சேகர் ரெட்டியார், ஸ்ரீ ஐயப்பா சேவா சங்கத்தின் தலைவர் சி.கே.பாபு, செயலாளர் ஏ.எம்.சம்பத், பொருளாளர் வி.நடராஜன், துணைச் செயலாளர் எஸ்.வேலு, துணைத் தலைவர் எஸ். வேல்முருகன் உள்ளிட்டடோர் முன்னின்று சிறப்பாக நடத்தினர் .
0 Comments