ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் பஜாரில் ஜெயசீலன், கார்த்திகா(35) என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் கார்த்திகா தனியார் சேவை மையம் ஒன்றை வைத்து நடத்தி வருகிறார். அப்போது இந்த மையத்திற்கு வருபவர்களிடம் அரசு வேலை, முதியோர் உதவித் தொகை மற்றும் அரசு நலத்திட்டங்களை பெற்று தருவதாக கூறியுள்ளார். அதன் பின் 30க்கும் மேற்பட்டவர்களிடம் சுமார் 4 கோடிக்கு மேல் பணம் வாங்கி மோசடி செய்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அதன்படி விரைந்து வந்த காவல் துறையினர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். அந்த விசாரணைக்கு பின்னர், இ-சேவை மையத்துக்கு சீல் வைத்தனர். இதை அறிந்த கார்த்திகா அங்கிருந்து தப்பி ஓடினார். இதைத்தொடர்ந்து காவல்துறையினர் தலைமுறைவாக இருந்த கார்த்திகாவை தேடி வந்த நிலையில், நேற்று சென்னையில் கைது செய்தனர். அவர் நடத்திய இ-சேவை மையம் மற்றும் அவரது வீட்டில் காவல்துறையினர் சோதனை நடத்தினர். அதன் பின்னர் அங்கிருந்த கம்ப்யூட்டர், ஹார்ட் டிஸ்க் மற்றும் பல்வேறு ஆவணங்களையும் கைப்பற்றினர்.
0 Comments