கேரளா மாநிலம் கோட்டையம் பகுதியை சேர்ந்த சிலர் ஒரு வேனில் ஏற்காடுக்கு சுற்றுலா சென்றுள்ளனர். இவர்கள் இன்று அதிகாலை தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே வந்த ஒரு கார் மீது பயங்கரமாக மோதியது.இதில் வேன் மற்றும் கார் அப்பளம் போல் நொருங்கிய நிலையில் சுற்றுலா பயணிகள் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 18 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
0 Comments