3 வருஷத்தில் அண்ணாமலை சேர்த்த சொத்து ரூ.10,000 கோடி.... திருச்சி சூர்யா குற்றச்சாட்டு


 பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கடந்த 3 வருடங்களில் மட்டும் ரூ.10,000 கோடி சொத்து சேர்த்துள்ளதாக அந்தக் கட்சியிலிருந்து விலகிய திருச்சி சூர்யா பரபரப்பு குற்றச்சாட்டினை தெரிவித்துள்ளார். இதனை வருமானவரித்துறை உறுதிப்படுத்தியுள்ளதாக கூறிய அவர் அதற்கான ஆதாரத்தையும் வெளியிட்டுள்ளார். மேலும் அண்ணாமலை தன்னுடைய பினாமி மூலம் சொத்துக்களை வாங்கி குவித்துள்ளதாகவும் இதில் வரி ஏய்ப்பு நடந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இது பற்றி அவர் வெளியிடுள்ள எக்ஸ் பதிவில்,

அண்ணன் அண்ணாமலைக்கு வணக்கம் !! இன்று உங்களுடைய பிரஸ்மீட் பார்த்தேன், நிருபர்கள் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் செந்தில் பாலாஜி, ஜோதிமணி, விஜயபாஸ்கர் என பதட்டத்தில் உளறினீர்கள். பாவம், உங்களுடைய ரீல் அந்து போய் பல மாசமாச்சு, நாடகம் முடியும் நேரமிது. அண்ணாமலை மூன்றே வருடத்தில் பத்து ஆயிரம் கோடி சொத்து சேர்த்துவிட்டார் என முதன்முதலாக நான் சொன்ன போது உங்களிடம் கூலிக்கு வேலை செய்யும் வார்ரூம் ஆட்களும், உங்களுடைய உண்மை முகத்தை உணராத பாஜக தொண்டர்களும் என்னை திட்டி தீர்த்தார்கள்.

இன்று நான் சொன்னது முற்றிலும் உண்மை என பாஜக ஆளும் ஒன்றிய அரசின் வருமான வரித்துறையே உறுதி செய்துள்ளது. நீங்கள் DMK Files வெளியிட்ட பொழுது பினாமி சொத்துகள் எல்லாம் திமுக அரசியல்வாதிகள் கொள்ளையடித்த சொத்து என கணக்கு சொன்னீர்களே இப்போது அதே லாஜிக் உங்களுக்கும் பொருந்தும் அல்லவா? உங்களின் ஒரு பினாமி சத்திரபட்டி செந்தில்குமாரிடம் இருந்து மட்டும் ரூ. 10 கோடி ரொக்க பணம், ரூ. 240 கோடி வரி ஏய்ப்பிற்கான ஆதாரம், பல நூறு கோடிகள் சொத்து தொடர்பான ஆவணம் பறிமுதல் செய்துள்ளது ஒன்றிய அரசின் வருமான வரித்துறை. 

சரி, ஏழாவது கேள்விக்கு வருவோம். உங்க அக்கா புருஷன் சிவகுமாரும் செந்தில்குமாரும் அண்ணாமலையார் சேம்பர்ஸ் நிறுவனத்தில் கூட்டாளிகளா இல்லையா ? ஊழல் என்றாலே ஊளையிட்டுக் கொண்டு வருவீர்களே 240 கோடி வரி ஏய்ப்பு என்றால் 800 கோடி சொத்து சேர்த்ததில் 30% சதவீத வரியைப்பு நடந்துள்ளது கணக்கு சரியா மலை.

Post a Comment

0 Comments