சத்தீஷ்காரில் நக்சல்கள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 2 பாதுகாப்பு படை வீரர்கள் படுகாயம்

 


சத்தீஷ்கார் மாநிலம் நாராயண்பூர் மாவட்டத்தில் உள்ள கச்சப்பால் என்ற கிராமத்தில் நக்சல்கள் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து, எல்லை பாதுகாப்பு படை மற்றும் மாவட்ட ரிசர்வ் காவல் படையை சேர்ந்த வீரர்கள் இணைந்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.

இந்நிலையில், இன்று காலை சுமார் 8.30 மணியளவில், கச்சப்பால் கிராம் அருகே உள்ள வனப்பகுதியில் பாதுகாப்பு படையினர் மீது நக்சல்கள் வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் மாவட்ட ரிசர்வ் காவல் படையை சேர்ந்த ஜானக் பட்டேல் மற்றும் காசிராம் மன்ஜி ஆகிய 2 வீரர்கள் படுகாயமடைந்தனர்.

காயமடைந்த வீரர்கள் உடனடியாக மீட்கப்பட்டு நாராயண்பூர் மாவட்ட மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். அவர்களின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து, தாக்குதல் நடத்திய நக்சல்களை பாதுகாப்பு படை வீரர்கள் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Post a Comment

0 Comments