மேஷம் ராசிபலன்
உங்களது வாழ்க்கை முறையில் சில மாற்றங்கள் நேர்த்தியாக உள்ளன. விட்டுவிடமுடியாத ஒரு மோசமான பழக்கத்தைத் விட்டொழிக்கும் வழிகளைப் பற்றி சிந்திக்க, இது ஒரு சிறந்த தருணமாகும். உங்களது வாழ்க்கையில் பிரவேசிக்க, ஒரு அந்நியர் முயற்சிக்கிறார். இந்த நேரத்தில், அவரின் எல்லா நாடகங்களையும் சமாளிக்க உங்களுக்கு நேரமும், சக்தியும் இருகிறதா என உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள். பகல் கனவு காண்பது என்பது பின்னாளில் உங்களது நேரத்தை வீணடித்து விட்டது. இந்த அங்கலாய்ப்பான நிலையை நீங்கள் மாற்றிவிட்டு, உங்களது கனவுகளை அடைய பணி செய்யுங்கள்.
ரிஷபம் ராசிபலன்
அமைதியாக இருப்பதில் இன்று நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். உண்மையில், இது உங்களுக்கு மிகவும் அவசியம். இல்லையெனில், சிலருடனான சந்திப்புகள், இன்று உங்கள் மனநிலையைப் பாதிக்கலாம். இதனால் உங்களுக்குக் கோபம் அதிகரிக்கலாம். கடந்த சில நாட்களாக உங்களது கோப உணர்ச்சிகள் அனைத்து இடங்களிலும் வெளிப்படுகிறது. மன அழுத்தத்தைக் குறைக்க, நீங்கள் ஒவ்வொரு நாளும் சிறிது நேரம் ஒதுக்க வேண்டும். உங்களுக்குரிய நேரத்தில், சிறிது நேரம் ஆன்மீகத்தில் ஈடுபடுங்கள். அது இந்த வாரம் முழுவதும் அமைதியாகச் செயல்பட உங்களுக்கு உதவும்.
மிதுனம் ராசிபலன்
நீங்கள் மிகவும் கடினமாக உழைப்பதன் மூலம், அதுவும் இடைவெளி இல்லாமல் உழைப்பதன் மூலம், உங்கள் மதிப்பை நிரூபிக்க முயற்சிக்கிறீர்கள். அதற்கு, யாருடைய ஒப்புதலும் உங்களுக்கு தேவையில்லை. உங்களுக்கு நீங்கள் மட்டுமே போட்டியாளர். அவ்வப்போது, ஒரு முறை ஓய்வு எடுப்பதற்கு நினைவிற் கொள்ளுங்கள். மிகவும் கஷ்டத்தில் இருக்கும் போது கூட, நீங்கள் நல்லது செய்யவே விரும்புகிறீர்கள். முன்னேறுங்கள். நீங்கள் ஒரு மாற்றத்தை உருவாக்க முடியும். மேலும், இது எதிர்மறை சிந்தனையிலிருந்து உங்கள் மனதை மாற்றிவிடும்.
கடகம் ராசிபலன்
மோசமான அணுகுமுறையை விட்டுவிட்டு, உங்கள் பின்னால் இருப்பவர்கள் யாரும் உங்களை ஏமாற்றாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். உங்களை வீழ்த்த யாரோ ஒருவர் வெளியே காத்துக் கொண்டிருக்கிறார். மற்றவர்களை மகிழ்விக்கும் உங்கள் தன்மை உங்களைச் சிக்கலில் ஆழ்த்தியுள்ளது. இன்று நீங்கள், உங்கள் ஆற்றலைப் பயன்படுத்தும் வகையில் வைத்துக் கொள்ள வேண்டும். மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை மறந்து விட்டு, நீங்கள் எடுக்கும் முடிவுகளுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். புத்திசாலித்தனமாகப் பேசுங்கள், எந்த முடிவு எடுக்காமல் செயல்படத் தொடங்குங்கள், உங்கள் திருமணத்திற்குப் பிறகு ஒரு பிரகாசமான திருப்பம் கிடைக்கும் என்று தெரிகிறது.
சிம்மம் ராசிபலன்
நீங்கள் விரும்பும் ஒருவர் உங்கள் நம்பிக்கையை உடைத்துவிட்டார். இதை நீங்கள் உணர்கிறீர்கள். நீங்கள் அவரைப் பற்றி மிகச் சிறந்தவர் என்ற கருத்தைக் கொண்டிருந்த போதிலும், நீங்கள் அதை ஏற்றுக் கொள்ளக் கூடாது. நீங்கள் மீண்டும் ஒருமுறை ஏமாற்றப்படவேண்டுமா? என்று சிந்தியுங்கள். சில உறவுகள் உங்களுடன் ஆழமாக இருக்க வேண்டும் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் எதிர்பாராத ஒருவரிடம் இருந்து பாசம் மற்றும் கவனிப்பு உங்களை வந்தடையும். அதை ஏற்றுக் கொண்டு, அது கொடுக்கும் மகிழ்ச்சிக்கு நன்றியுடன் இருங்கள்.
கன்னி ராசிபலன்
உங்கள் வாழ்வில் ஏற்பட்ட கடினமான நேரங்களில், அதைக் கடந்து செல்ல உதவிய உங்கள் அன்புக்குரியவர்களுக்கு நன்றி சொல்ல மறக்காதீர்கள். எப்போதும் சந்தோசமாக இருப்பது மட்டுமே உங்கள் விருப்பமாக இருக்க வேண்டும். உங்களுக்கு எதிராக மில்லியன் கணக்கான விஷயங்கள் செயல்படலாம், இருந்தாலும், நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதையே தேர்வு செய்யுங்கள். இது போன்ற விஷயங்களில் அனுபவம் பெற்றவர்களின் ஆலோசனையைக் கேட்டுப் பெறுங்கள். உங்கள் உடல் சொல்வதைக் கேளுங்கள், உடற்பயிற்சியில் ஈடுபடவோ அல்லது உணவுக் கட்டுப்பாட்டையோ தொடங்குங்கள்.
துலாம் ராசிபலன்
உங்கள் மனதில் சில விஷயங்கள் உள்ளன. உங்கள் மனதில் உள்ளதை அடையும் வரை நீங்கள் ஓயமாட்டீர்கள். கவனம் செலுத்துவது நல்லது என்றாலும், உங்கள் தனிப்பட்ட குறிக்கோள்களையோ அல்லது தனிப்பட்ட வாழ்க்கையையோ முழுமையாக கட்டுக்குள் வைத்திராமல் இழப்பது நல்லாலோசனை ஆகாது. இந்த நாள், உங்களுக்கு சமநிலையினைக் கொண்டதாக இருக்கும். உங்களது வேலைக்கும், தனிப்பட்ட வாழ்க்கைக்கும் இடையில் நீங்கள் ஒரு சமநிலையை ஏற்படுத்த வேண்டும். நீங்கள் உங்கள் உடலைப் புறக்கணித்து வருகிறீர்கள். இது நிச்சயமாக உங்கள் உடல்நலத்தை பாதிக்கிறது.
விருச்சிகம் ராசிபலன்
நீங்களும் உங்கள் கூட்டாளிகளும் சமீப காலமாகநிறையச்சச்சரவுகளைச் சந்தித்து வருகிறீர்கள். அவர்களுடனானசச்சரவுகளைக்களைய ஒரு வழியைக் கண்டுபிடிக்க நேரம் இதுவாகும். அதனை இனி நீங்கள் புறக்கணிக்க முடியாது. கடந்த கால தவறுகளைப் பற்றி நீங்களே வருத்தப்படுவது தவறான நடவடிக்கை. நீண்ட காலமுன்னேற்றத்திற்குத்தேவையான நடவடிக்கைகளைத் தேர்வு செய்து, அதற்கு ஏற்ற வகையில் சிந்தியுங்கள். இன்று உங்களுக்கு வீட்டிலும், வேலைகளிலும் உள்ள விஷயங்கள் நல்ல முறையில் நடக்கும்.
தனுசு ராசிபலன்
வேலைச் சுமை அதிகரித்து உள்ள நிலையில், எங்கிருந்து தொடங்குவது என்பது உங்களுக்குத் தெரியாமல் இருக்கலாம். உங்கள் வேலைக்கும், வீட்டிற்கும் இடையில் ஒரு சமநிலையை ஏற்படுத்த வேண்டும், இல்லையெனில், இதனால் உங்களுக்கு ஏற்படும் மன அழுத்தம் உங்கள் ஆரோக்கியத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். இன்று, நீங்கள் நினைப்பதை விட அதிகமாக பணியாற்ற வேண்டும். அறிவுடன் பேசி, அதன் மூலம் பயனுள்ள யோசனைகளைக் கண்டறியுங்கள். மிகவும் அனுபவம் வாய்ந்தவர்களிடமிருந்து ஆக்கப்பூர்வமான யோசனைகள் உங்களுக்குக் கிடைக்கும் என்பதை நீங்கள் உறுதியாக நம்பலாம்.
மகரம் ராசிபலன்
மன அழுத்தம் மற்றும் பதற்றம் உங்களை ஆட்கொள்வதை நீங்கள் உணர்ந்து கொள்ள முடியும். நீங்கள் அதிகமாகச் சிந்திக்க முயல்கிறீர்கள். அதிகமாகச் சிந்திக்க முயலும் போது, சிந்தனைக்கும், கவனம் செலுத்துவதற்கும் இடையேயான வரைமுறைகள் என்ன என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். தேவைப்படுபவர்களுக்கு உதவி செய்யுங்கள். ஆனால், உங்களைப் பயன்படுத்திக் கொள்வதில் உறுதியாக இருப்பவர்களிடம் இருந்து விலகியே இருங்கள். உங்களை விரும்பும் ஒருவர், இன்று உங்கள் வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிப்பார். இன்று அவர்களிடம் அன்பாகப் பேசுங்கள்.
கும்பம் ராசிபலன்
குடும்பம் மற்றும் நெருங்கிய நண்பர்கள் உங்கள் வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிப்பார்கள். நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் வழிகாட்டிகள். அவர்கள், உங்களுக்கு வழிகாட்டும் ஒளியாக இருப்பார்கள். நீங்கள் அவர்களிடம் ஆலோசனை கேட்க வேண்டும். உங்கள் தனிப்பட்ட லாபத்திற்காக நீங்கள் செய்து கொண்டிருந்த அனைத்து விஷயங்களிலிருந்தும் இது வரவேற்கத்தக்க மாற்றமாக இருக்கலாம். இந்த மாற்றம் பற்றிய பேச்சு நடக்கும். உங்கள் வேலையில் சரியான ஒப்பந்தங்களைச் செய்வதில் நீங்கள் புத்திசாலித்தனமாக இருக்க வேண்டும்.
மீனம் ராசிபலன்
நீங்கள் அதிக நேரம் செலவிடக்கூடிய உங்களது அறையைத் தூய்மையாக வைத்திருப்பதற்கும், மறுசீரமைப்பதற்கும் கவனம் செலுத்துங்கள். படைப்பாக்கச் சிந்தனையை வளர்ப்பதற்கு தூய்மை மிக முக்கியமானது. இன்று, நீங்கள் எதிர்பாராத சில செய்திகளைப் பெறலாம். அது உங்களுக்கு கசப்பும், இனிப்பும் நிறைந்ததுமான நினைவுகளைத் தரக்கூடும். உங்களை மோசமான சூழல்களுக்கு தள்ளும் விஷயங்களில், நேர்மறையான விஷயங்களைத் தேர்வு செய்யுங்கள். உங்களுக்கு சில எதிர்பாராததும், ஆச்சரியமானதுமான பாராட்டுதல்கள் கிடைக்கப் பெறலாம். உங்களுக்கு அமையப்பெற்ற ஆசீர்வாதங்களுக்கு நன்றியுடன் இருங்கள். நல்ல எண்ணங்கள், நல்ல விஷயங்களை செயல்படுத்துகின்றன என்பதை நினைவிற் கொள்ளுங்கள்!
0 Comments