தமிழகத்தில் 26,000த்திற்கும் மேற்பட்ட ரவுடிகளின் சொத்து விபரத்தினை சேகரிக்கும் காவல் துறை


 தமிழகத்தில் 26,000த்திற்கும் மேற்பட்ட ரவுடிகள் இருப்பது தெரிய வந்துள்ளது. அவர்களின் சொத்து மற்றும் வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டு வருகின்றன. ரவுடிகளுக்கு பின்புலமாக உள்ள, நிதி ஆதாரங்களை கண்டறியும் பணியும் நடக்கிறது. இதில், சந்தேகத்திற்குரிய 41 ரவுடிகளின் சொத்துக்கள் குறித்து விசாரணை நடக்கிறது. மீதமுள்ள ரவுடிகளின் சொத்துக்களை அடையாளம் காணும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி, ரவுடிகள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களின் பெயரில் உள்ள சொத்து ஆவணங்களை சரிபார்க்க, காவல் துறை சார்பில் வருவாய் துறையினருக்கு கடிதம் எழுதப்பட்டு உள்ளது. ரவுடிகள் ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வரும் டி.எஸ்.பி.,க்கள் மற்றும் கூடுதல் டி.எஸ்.பி.,க்கள் வாயிலாக, இதற்கான கடிதம் அனுப்பப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

Post a Comment

0 Comments