அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு..... படிப்பு முடியும் வரை கட்டணம் கிடையாது...... ஐகோர்ட் அதிரடி உத்தரவு

 


சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் பாதிக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு 25 லட்ச ரூபாய் இடைக்கால இழப்பீடு வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர். முதல் தகவல் அறிக்கை பொதுவெளியில் கசிந்ததால் இழப்பீடு வழங்க வேண்டும் என அரசுக்கு உத்தரவு பிறப்பித்தனர்.

மாணவியின் துணிச்சலையும் நீதிபதிகள் பாராட்டியுள்ளனர். பாதிக்கப்பட்ட மாணவியின் படிப்பு முடியும் வரை அவரிடம் எந்த கட்டணமும் வசூலிக்க கூடாது என நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். மேலும் பாலியல் வன்கொடுமை விவகாரத்தை விசாரிக்க மூன்று பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் குழுவை என உயர்நீதிமன்றம் அமைத்தது.

Post a Comment

0 Comments