ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா...... சுமார் 2.5 லட்சம் பேர் வருவார்கள் என எதிர்பார்ப்பு - அமைச்சர் சேகர்பாபு

 


திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா, வரும் 30-ந்தேதி தொடங்கும் நிலையில், அதற்கான முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கலந்து கொண்டார். பின்னர் கோவிலில் சாமி தரிசனம் செய்த அவர், கோவில் வளாகம் முழுவதும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, ஜனவரி 10-ந்தேதி நடைபெறும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்வுக்கு மட்டும் சுமார் 2.5 பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்தார். மேலும் 300 பேருக்கு 4 ஆயிரம் ரூபாய் டிக்கெட், ஆயிரம் பேருக்கு 700 ரூபாய் டிக்கெட், 75 நபர்களுக்கு வி.ஐ.பி. அட்டை, 1,650 உபயதாரர் மற்றும் கட்டளைதாரர்கள் என 3,025 நபர்களுக்கு சிறப்பு அட்டை வழங்கப்பட்டுள்ளதாகவும், பரமபத வாசல் நிகழ்வுக்கு 4 ஆயிரம் பேருக்கு அனுமதி அட்டை வழங்கப்பட உள்ளதாகவும் காலை 6.30-க்கு பிறகு பொது தரிசனத்திற்கு மக்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

Post a Comment

0 Comments