ரசிகை உயிரிழப்பு..... ரூ.25 லட்சம் நிவாரணம் அறிவித்த நடிகர் அல்லு அர்ஜுன்

 


தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அல்லு அர்ஜுன். இவருடைய நடிப்பில் வெளிவந்த புஷ்பா திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அதன் தொடர்ச்சியாக இரண்டாம் பாகம் வெளியானது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் முதல் நாளில் 294 கோடி வரை வசூல் சாதனை புரிந்தது. இந்நிலையில் இந்த படத்தின் முதல் நாள் ஷோவை காண சென்ற நடிகர் அல்லு அர்ஜுனின் ரசிகை கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார். அதாவது புஷ்பா 2 பீரிமீயர் ஷோவை காண நடிகர் அல்லு அர்ஜுன் வந்தபோது அவரை காண ஏராளமான ரசிகர்கள் திரண்டனர்.

இதனால் போலீசார் தடியடி நடத்திய போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் ரேவதி என்ற பெண் கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வந்த நிலையில் நெரிசலில் சிக்கி மயங்கி விழுந்து உயிரிழந்தார். இந்நிலையில் நடிகர் அல்லு அர்ஜுன் தற்போது இந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் என்னுடைய ரசிகை உயிரிழந்த செய்தியை கேட்டு அதிர்ச்சியும் மன வேதனையும் அடைந்தேன். என்னுடைய சார்பில் குடும்பத்தினருக்கு 25 லட்ச ரூபாய் நிவாரணம் அறிவிக்கிறேன். நானும் என்னுடைய குழுவும் எந்த உதவி வேண்டுமானாலும் செய்வதற்கு தயாராக இருக்கிறோம். உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து தேவைப்படும் உதவிகளை வழங்குவேன். மேலும் இக்கட்டான சூழலின் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

Post a Comment

0 Comments