ஆண்டிபட்டி அருகே ராஜகோபாலன்பட்டி பகுதியில் 24 மணி நேரமும் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் வழங்கும் தண்ணீர் தொட்டி திறப்பு

 

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வைகைஅணை நான்கு வழி சாலை பிரிவில்   ராஜகோபாலன்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட சத்யா நகரில் ஊராட்சி  சார்பில் 24 மணி நேரமும் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் வழங்கும் வகையில் 1 லட்ச ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்ட  2 ஆயிரம் லிட்டர்  தண்ணீர் தொட்டி திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

 இந்நிகழ்ச்சிக்கு ராஜகோபாலன்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் வேல்மணி பாண்டியன் தலைமை தாங்கினார்.சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் தொட்டியை  ஆண்டிபட்டி திமுக சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் திறந்து வைத்தார் . தென் மாவட்டங்களின் முக்கிய சுற்றுலாத்தலமான வைகை அணைக்கு ஆண்டிபட்டியில் இருந்து செல்லும் சாலை வழித்தடத்தில் கட்டி முடிக்கப்பட்டு,  திறக்கப்பட்ட இந்த தண்ணீர் தொட்டி மூலம் வைகை அணைக்குச் செல்லும் சுற்றுலா பயணிகளும், ராஜகோபாலன்பட்டி சத்யாநகர் பகுதியைச் சேர்ந்த பொதுமக்களும் பயனடைவார்கள். நிகழ்ச்சியில் ஜி.கே. பாண்டியன் வரவேற்று பேசினார்.

 தொழிலதிபர் சேட் பரமேஸ்வரன் தொகுத்து வழங்கினார். விழாவில் திமுக நகர செயலாளர் பூஞ்சோலை சரவணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் முனீஸ்வரன், பரமேஸ்வரன், பிச்சைமணி மற்றும் சமூக ஆர்வலர்கள் வசந்தம் வேல்முருகன் ,மாரிமுத்து ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள் .தேனி மாவட்டத்தில் பொதுமக்கள் நலன் கருதி ராஜகோபாலன்பட்டியில் உள்ள அனைத்து கிராமங்களிலும் குடி தண்ணீர் தன்னிறைவு பெற்ற நிலையில் ,இப்பகுதி பயன்பாட்டிற்காக ஊராட்சி ஒன்றிய நிதியிலிருந்து தண்ணீர் தொட்டி திறக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இப்பகுதியைச சேர்ந்த வார்டு கவுன்சிலர் தமிழ்ச்செல்வி அழகர்சாமி நன்றி கூறினார். விழாவில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments