மீஞ்சூர்: ரூ.2.3 கோடி மதிப்பு சமுதாய கூடங்கள்,தானிய கிடங்கு கட்டுவதற்கான அடிக்கல் நாட்டினார் எம்எல்ஏ துரை சந்திரசேகர்


திருவள்ளூர் மாவட்டம், காட்டூர் ஊராட்சியில் சுமார் 1 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சமுதாயக் கூடம், சுமார் 1 கோடி ரூபாய் 3 லட்சம் மதிப்பீட்டில் கலைஞர் நூற்றாண்டு சமுதாயக்கூடம் மற்றும் தானியக்கிடங்கு கட்டிடம்  அடிக்கல் நாட்டு விழாவில் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர், மீஞ்சூர் சேர்மன் அத்திப்பட்டு ஜி.ரவி ஆகியோர் கலந்துகொண்டுஅடிக்கல் நாட்டினர். 

நிகழ்ச்சி ஏற்பாட்டினை காட்டூர் ஊராட்சி மன்ற தலைவர் செல்வராமன் செய்தார்.இதில் ஒன்றிய கவுன்சிலர் நந்தினி ஊராட்சி செயலர் ,ஜெயமாலா ,வார்டு உறுப்பினர்கள், மூர்த்தி ,ஜெய் ஸ்ரீ கணேஷ் ,முனியம்மாள் சங்கர், பூங்கொடி, நந்தினி, தியாகராஜன், ஏராளமான உள்ளாட்சி பிரதிநிதிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.  ஊராட்சி மன்ற துணைத் தலைவர், ரேவதி சண்முகசுந்தரி, வருகை தந்த அனைவருக்கும்  நன்றி தெரிவித்தார்.

Post a Comment

0 Comments