இந்தியாவின் சிறந்த பேட்மிட்டன் வீராங்கனை பிவி சிந்து. இவர் இரு முறை இந்தியாவுக்காக ஒலிம்பிக் பதக்கம் வென்றுள்ளார். இவருக்கு தற்போது 29 வயது ஆகும் நிலையில் தற்போது திருமணம் நடைபெற உள்ளது. அதன்படி டிசம்பர் 22ஆம் தேதி உதய்பூரில் பி.வி சிந்துவுக்கு திருமணம் நடக்கிறது. இவர் ஹைதராபாத் சேர்ந்த போசிடெக்ஸ் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் வெங்கட தத்தா சாய் என்பவரை திருமணம் செய்ய உள்ளார்.
இவர்களுக்கு வருகிற 20-ம் தேதி திருமண நிகழ்ச்சி தொடங்கும் நிலையில் 22ஆம் தேதி உதய்பூரில் திருமணம் நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து 24 ஆம் தேதி ஹைதராபாத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. மேலும் இரு வீட்டார் சம்மதத்துடன் இந்த திருமணம் நடைபெறும் நிலையில் பி.வி சிந்துவுக்கு தற்போது பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
0 Comments