என் மாமியார் சீக்கிரம் சாகணும்.... 20 ரூபாய் நோட்டில் எழுதி கோவில் உண்டியலில் போட்ட நபர்


 கர்நாடக மாநிலத்தில் உள்ள கலபுரகி மாவட்டத்தில் அப்ஜலாபுரா தாலுகா உள்ளது. இங்கு கட்டரக பாக்கியவந்தி திருக்கோவில் அமைந்துள்ளது. இது மிகவும் பிரபலமான கோவிலாக இருக்கும் நிலையில் கோவில் உண்டியலில் வந்த காணிக்கை பணம் எண்ணப்பட்டது. அப்போது உண்டியலில் இருந்த ஒரு 20 ரூபாய் நோட்டில் ‌ என்னுடைய மாமியார் சீக்கிரம் சாகவேண்டும் என்று எழுதப்பட்டிருந்தது.

அந்த உண்டியலில் மொத்தம் 60 லட்சத்து 5 ஆயிரம் ரொக்க பணம், 200 கிராம் தங்கம் மற்றும் ஒரு கிலோ வெள்ளி போன்றவைகள் கிடைத்துள்ளது. மேலும் பணத்தை எண்ணும்போது ஊழியர் ஒருவர் அந்த இருபது ரூபாய் நோட்டை கோவில் நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்ற நிலையில் அது தொடர்பான புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Post a Comment

0 Comments