ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த தனியார் பேருந்து..... தடுப்பு சுவரில் மோதியதில் 20 பேர் காயம்....

 


விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கூட்டேரிப்பட்டு என்ற இடத்தில் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையில் தாறுமாறாக ஓடி தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் 20 பயணிகள் காயமடைந்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காயமடைந்த பயணிகளை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Post a Comment

0 Comments