நாகை: சுனாமி 20ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றி கழகம் சார்பில் அஞ்சலி


சுனாமி பேரலை  2004 ஆம் ஆண்டு  ஏற்பட்டு 20ஆம் ஆண்டு நினைவு தினம் நாகை மாவட்டம் முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

 நாகை  மாவட்டத்தில் பொதுமக்கள் 6065பேர்  உயிரிழந்த நிலையில்  அவர்களுக்கு அஞ்சலி செலுத்து வகையில் தமிழக வெற்றி கழகம் சார்பில் மாவட்ட பொறுப்பாளர் எஸ்.கே.ஜி.ஏ.சேகர் தலைமையில் நாகை  அண்ணா சிலையிலிருந்து நீலா கீழவீதி,புதுப்பள்ளி வழியாக ஆரியநாட்டு தெரு கடற்கரையில் உள்ள சுனாமி நினைவு ஸ்தூபியில் சுமார் 300க்கும் மேற்பட்டோர்  அமைதிப் பேரணியாக  சென்று மலர்வளையம் வைத்து கடல் நீரில் பாலை ஊற்றியும், மலர்களை தூவியும் அஞ்சலி செலுத்தினர்.

என். வீரமணி ,வழக்கறிஞர் ஆல்பர்ட் ராயன், வேளாங்கண்ணி ஏழுமலை உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

மக்கள் நேரம் எடிட்டர்

நாகை நிருபர்

ஜு. சக்கரவர்த்தி

Post a Comment

0 Comments