நாகையில் காசநோய் இல்லாத தமிழ்நாடு 2025 சிறப்பு முகாம்

 


நாகப்பட்டினம்  மாவட்ட ஆட்சியர் ப. ஆகாஷ்  ஆணைப்படி,மாவட்ட சுகாதார அலுவலர் டாக்டர் பிரதீப் கிருஷ்ணகுமார்,  உத்திரவின்பேரில் , ஊராட்சி மன்ற தலைவர் திருமதி. கோமதி, வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் பி. பிரிதிவி ராஜன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் கே.செல்வன், இவர்களது முன்னிலையில்  இன்று 10.12.2024 புதுச்சேரி ஊராட்சியில் தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு 'காசநோய் இல்லாத தமிழ்நாடு 2025 'என்ற திட்ட முகாம் நடைபெற்றது. காசநோய் ஒழிப்பு முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் தர்மலிங்கம் மற்றும் சுகாதார ஆய்வாளர் செ.செந்தில்குமார் ஆகியோர் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்தனர் .

வடுகச்சேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் புதுச்சேரி மக்களை தேடி மருத்துவ பணியாளர்கள்  திருமதி. வைஷாலி, திருமதி. லதா ஆகியோர் பொது மக்களுக்கு  சர்க்கரை அளவு, இரத்த கொதிப்பு சிகிச்சை பார்க்கப்பட்டது.முகாமில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

மக்கள் நேரம் எடிட்டர் மற்றும் நாகை மாவட்ட நிருபர் ஜி. சக்கரவர்த்தி

Post a Comment

0 Comments