2024ம் ஆண்டு இன்றுடன் நிறைவு..... சிறப்பு டூடுல் வெளியிட்ட கூகுள்


 2024ம் ஆண்டு இன்றோடு முடிகிறது. இன்றுதான், வார கடைசி நாள், மாத கடைசி நாள், வருடத்தின் கடைசி நாள் ஆகும். கூகுள் நிறுவனம் அவ்வப்போது பிரபல ஆளுமைகளின் பிறந்தநாள், பண்டிகை நாட்கள், முக்கிய தினங்கள் போன்ற நாட்களில் சிறப்பு டூடுலை வெளியிடுவது வழக்கம்.இந்த நிலையில் இன்று இரவு 12 மணியுடன் 2024ம் ஆண்டு நிறைவடைந்து, நாளை 2025வது ஆங்கில புத்தாண்டு பிறக்க உள்ளது. இந்தாண்டு டூடுலில், கூகுள் நிறுவனம் 2024ம் ஆண்டை நினைவுக் கூர்ந்துள்ளது. இருண்ட வானத்தின் பின்னணியில் தடிமனான எழுத்துகளில் 'கூகுள்' என எழுதப்பட்டுள்ளது.

குறிப்பாக 'ஓ' என்ற எழுத்து நள்ளிரவு 12 மணியை குறிக்கும் வகையில் கடிகாரத்தின் முள் இருக்கிறது. 2025ம் ஆண்டில் பிரகாசமாக இருப்போம். புதிய வாய்ப்புகள் நிறைந்த துவக்கமாக இருக்கட்டும் என்பதை குறிக்கிறது. வரும் 2025ம் ஆண்டு சிறப்பாக அமையட்டும் என்ற அனைவரது எதிர்பார்ப்பையும் குறிப்பிடுவது போல் இருக்கிறது.

Post a Comment

0 Comments