கார்த்திகை தீபத் திருவிழா..... மல்லிகை பூ கிலோ ரூ.2000-க்கு விற்பனை.....

 


தமிழகத்தில் இன்று கார்த்திகை தீபத் திருவிழா கொண்டாடப்பட இருக்கிறது. இன்று கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு அனைவரும் வீடுகளில் விளக்கு ஏற்றி சாமி கும்பிடுவார்கள். இந்நிலையில் தீபத் திருவிழாவை முன்னிட்டு இன்று பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

அதன்படி இன்று ஒரு கிலோ மல்லிகை பூ 2000 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படுகிறது. மதுரை உட்பட பல்வேறு மாவட்டங்களில் மல்லிகை பூ விலை உயர்ந்துள்ளது. இன்று கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெறும் என்பதால் பூக்கள் தேவை அதிகமாக இருக்கும். இதன் காரணமாக விலையும் அதிகரித்துள்ளது. மேலும் இதேபோன்று சாமந்திப்பூ மற்றும் பிச்சிப்பூ ஆகியவைகளின் விளையும் அதிகரித்துள்ளது.

Post a Comment

0 Comments