பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, மாவட்டங்களை சேர்ந்த ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா 2000 ரூபாய் வழங்கப்படும் என முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது குறித்து அதிகாரிகளுடன் இன்று அவர் ஆலோசனை நடத்தினார். அதன் பிறகு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
🔴விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு குடும்ப அட்டை அடிப்படையில் தலா ரூ.2,000 நிவாரணம்
🔴சேதமடைந்த குடிசைகளுக்கு தலா ரூ.10,000 நிவாரணம்
🔴இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம்
🔴சேதமடைந்த பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.17,000 நிவாரணம்
🔴பல்லாண்டு பயிர்கள் மற்றும் மரங்கள் சேதத்திற்கு ஹெக்டேருக்கு ரூ.22,500 நிவாரணம்
🔴மானாவரி பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.8,500 நிவாரணம்
🔴எருது, பசு, கால்நடை உயிரிழப்புகளுக்கு ரூ.37,500 நிவாரணம்
🔴வெள்ளாடு, செம்மறி ஆடு உயிரிழப்பு நிவாரணமாக ரூ.4,000 வழங்கிடவும்
🔴கோழி உயிரிழப்பு நிவாரணமாக ரூ.100 வழங்கிடவும்
🔴மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சான்றிதழ்கள், வாக்காளர் அட்டை, ஆதார் அட்டை, குடும்ப அட்டைகளை இழந்தவர்களுக்கு, சிறப்பு முகாம்கள் நடத்தி புதிய சான்றிதழ்கள் வழங்கிடவும்
🔴மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பாதிப்புக்குள்ளான குடும்பங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு புதிய பாடப் புத்தகங்கள் மற்றும் நோட்டுப் புத்தகங்கள் வழங்கிடவும்
-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
0 Comments