சீமான் சென்ற விமானம் தரையிறங்க முடியாமல் தவிப்பு.... 20 நிமிடங்களாக வானில் வட்டமடித்ததால் பரபரப்பு......

 


தமிழகத்தில் நேற்று முதல் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. நேற்று இரவு முதலே பல்வேறு மாவட்டங்களில் கன மழை வெளுத்து வாங்குகிறது. இந்நிலையில் மோசமான வானிலை காரணமாக தற்போது சீமான் பயணித்த விமானம் தரையிறங்க முடியாமல் வட்டமடிப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. அதாவது இன்று சென்னையிலிருந்து மதுரைக்கு சீமான் விமானத்தில் புறப்பட்டார்.

அப்போது மோசமான வானிலை காரணமாக அவருடைய விமானம் தரையிறங்க முடியாமல் கிட்டத்தட்ட 20 நிமிடங்களுக்கு மேல் வானில் வட்டமடித்துள்ளது. மதுரை விமான நிலையத்தை அடைந்தபோது மோசமான வானிலை காரணமாக கருமேகங்கள் சூழ்ந்ததால் தற்போது விமானம் தரையிறங்க முடியாமல் வானத்தில் வட்டமடித்தது. இன்று மாலை மணியளவில் தரையிறங்க வேண்டிய விமானம் மோசமான வானிலை காரணமாக 20 நிமிடங்கள் தாமதமாக பின்னர் பத்திரமாக தரையிறங்கியது. மேலும் இந்த சம்பவம் பயணிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Post a Comment

0 Comments