மேஷம் ராசிபலன்
உங்களைச் சுற்றியுள்ள எதிர்மறை எண்ணங்களை வெளியேற்றிட முடிவு செய்யுங்கள். உங்கள் மனத்தை நேர்மறையான விஷயங்களில் செலுத்த வேண்டும் என்று முடிவு செய்யுங்கள். உங்கள்சவால்களைப்புத்திசாலித்தனமாகத்தேர்வு செய்யுங்கள். உங்கள் நேரத்திற்கு மதிப்பு இல்லாத விஷயங்களுக்குப் பின்னால், உங்கள் ஆற்றலை வீணாக்காதீர்கள். உங்கள் வாழ்க்கை பயணத்தில் வரும் புதிய வாய்ப்புகளுக்கு இன்னும் காத்திருக்கிறது. இந்த வாய்ப்புகளை அடைய இன்றுஉங்களுக்குக்கிடைக்கும் நேர்மறை ஆற்றலைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
ரிஷபம் ராசிபலன்
உங்கள் உணர்வுகள் கட்டுப்பாடில்லாமல் இயங்குகின்றன. மேலும், நீங்கள் இதை கட்டுப்படுத்தியே ஆகவேண்டும். மனஅழுத்தம் என்பது உங்கள் சக்தியை பெருமளவில் வீணடிக்கும் ஒரு நிலை ஆகும். உங்கள் நிலையினை தாழ்த்தும் செயல்களை வேறுபடுத்தி, அதனை புரிந்துகொள்ளுங்கள். இது கடந்த காலங்களில், நீங்கள் மற்றவர்களுக்கு செய்த தவறுகள், அல்லது ஏமாற்றம் சார்ந்தவையாகக் கூட இருக்கலாம். அத்தகைய சிக்கல்களிலிருந்து எவ்வாறு விடுபடுவது என்பதை நீங்கள் கண்டறியுங்கள்.
மிதுனம் ராசிபலன்
எப்போதுமே, உங்களது முடிவெடுக்கும் திறனை நீங்களே சந்தேகித்துள்ளீர்கள். சந்தேகப்படுவதை நிறுத்திவிட்டு, நீங்களே சொந்தமாக உங்களது முடிவுகளை எடுக்க முடியும் என்று நம்புங்கள். இன்று, வெறுமனே அமைதியாக இருப்பதும் மற்றும் உங்களது ஆத்ம துணையாளருடன் நேரத்தை செலவிடுவதும் உங்களுக்கு நிறைவான அமைதியைத் தரும். உங்களது அன்பிற்கினியவருடன் நட்புறவை வலுசேர்க்க நீங்கள் ஆடம்பரமான இடங்களுக்கு செல்லத் தேவையில்லை என்பதற்கு இதுவே போதுமான சான்று ஆகும். எனவே, உங்கள் நாளில் இது மந்தமான தருணம் அல்லை என்பதை உங்களது நண்பர்கள் உறுதி செய்வார்கள்.
கடகம் ராசிபலன்
உங்கள் வார்த்தைகளால் இன்று உங்களுக்கு நல்லது நடக்கும். கனிவான பேச்சுகள் உங்களது காயங்களை ஆற்றுவதுடன், உங்களுக்கு ஆறுதலையும் தரும். முந்தைய ஆண்டுகளின் காயங்கள் மறைந்து விடும். மக்கள் இன்று உங்களை புதிய மரியாதையுடன் பார்ப்பார்கள், ரகசியங்களை பாதுகாப்பதில் நீங்கள் சிறந்து விளங்குவீர்கள், உங்கள் புதிய நண்பர்களும் இது போன்று இருக்க வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்க வேண்டாம். இந்த எதிர்பார்ப்பால் உங்களுக்கு வருத்தமே ஏற்படும். ஒருவேளை நபர்களோ இடங்களோ உங்களுக்கு ஒரு மோசமான நேரத்தை நினைவூட்டலாம், மோசமான நினைவுகள் உங்களை புதிய நிலைக்கு கொண்டு செல்லும்.
சிம்மம் ராசிபலன்
உங்களது வேலைப்பளு உங்களை சோர்வானவராகவும், மிகவும் மந்தமானவராகவும் ஆக்கிவிடுகின்றது. இச்சூழலில், நீங்கள் உங்கள் கால்களை சற்றே நீட்டி ஆசுவாசப்படுத்தலாம். ஒரு சிறு நடைபயிற்சியை மேற்கொண்டு, புத்துணர்ச்சியான காற்றைப் சுவாசியுங்கள். இது உங்களுக்கு மிகச்சிறந்த அனுபவத்தைத் தரும். உங்களது அனுதாபம், உணர்ச்சிபூர்வமான ஆதரவு மற்றும் ஊக்கம் போன்றவற்றை உங்களுக்காகவே எப்போதும் இருக்கும் ஒருவருக்கு அளித்து உதவுங்கள். இவ்வாறாக, உங்களது இரக்கத்தின் மாண்பை மறக்கும் மனிதர்கள் அவர்கள் அல்லர். மாறாக, நீங்கள் அவர்களுக்காக செய்த உதவியினை அவர்கள் உண்மையிலேயே பெரிதும் பாராட்டுவார்கள்.
கன்னி ராசிபலன்
பல விஷயங்கள் நடத்திருக்கலாம், ஆனாலும், வாழ்க்கையில் முன்னேற வேண்டிய தேவை உங்களுக்கு உள்ளது. உண்மையில் உங்களுடன் இணைந்திருந்த நபர், சில காரணத்திற்காக இனி உங்கள் வாழ்க்கையில் இணைந்திருக்கப் போவதில்லை. சமீப காலமாக உங்களைப் பாதித்து வரும் மன அழுத்தம் உங்கள் உடல் நிலையைப் பாதிக்காமல் பார்த்துக் கொள்வதில் நீங்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும். தியானம் மற்றும் உடற்பயிற்சிகளில் ஈடுபடுவது மிகவும் நல்லது என்று பரிந்துரைக்கப்படுகிறது. இது மன அழுத்தத்திலிருந்து வெளியே வர உங்களுக்கு உதவும்.
துலாம் ராசிபலன்
உங்களுக்கு சவுகரியமாக இருக்கும் மண்டலத்தின் எல்லையிலிருந்து வெளியேறுவதற்கு சற்று குழப்பமாக இருக்கும் போது, இந்த மாற்றம் ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் உங்களுக்கு பயனளிக்கும். சிறியதாக இருந்தாலும், பெரியதாக இருந்தாலும், இதுபோன்ற மாற்றங்கள் உங்களுக்கு உதவும் என்று நம்பிக்கையுடன் இருங்கள். நீங்கள் மற்றவர்கள் மீது கடுகடுக்கப் போகிறீர்கள் என்று நீங்கள் உணர்கிறீர்கள். இது உங்களது அன்புக்குரியவர்களிடமிருந்து கூட, உங்களைத் துன்புறுத்துகிறது. உங்கள் பயத்தை ஓரம்கட்டி வைத்துக் கொள்ளுங்கள். அதை எதிர்கொள்வதை பற்றி கவலைப்பட வேண்டாம். மேலும், இன்று உங்கள் மென்மையான குணங்களை அவர்களுக்கு வெளிப்படுத்த பயப்பட வேண்டாம்.
விருச்சிகம் ராசிபலன்
நீங்கள் புத்திசாலித்தனமாக இருக்கிறீர்கள். அவ்வாறு இருப்பது, நீங்கள் வெற்றிக் கோப்பைக் கொண்டு அக்களிக்கும் போது உங்களுக்குத் தெரிய வரும். உங்கள் இலக்கை அடைய நீங்கள், தடையாக இருக்கும் எந்த ஒரு சிறிய தடையையும் கூட கண்டுபிடித்து அதை வெளியே எடுத்து எறிந்து விடுவீர்கள். நீங்கள் மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் இருக்கிறீர்கள். நீங்கள் மிகவும் திறமையாகவும் பாராட்டத்தக்க விதத்திலும் ஏதாவது செய்கிறீர்கள்! உங்களுக்கு இன்று சில உதவிகள் தேவைப்படலாம் அல்லது நிபுணர் ஆலோசனை தேவைப்படலாம். உங்களுக்கு எல்லாம் தெரிந்து இருக்கிறது என்று நீங்கள் நினைத்தாலும் கூட, அனுபவம் வாய்ந்தவர்களிடமிருந்து வரும் நல்ல ஆலோசனையைக் கேட்டுக் கொள்ளுங்கள், கடின உழைப்பு உங்களுக்கு நல்ல பலனைத் தரும். உங்களது முயற்சிகள், குறுகிய காலத்தில் பாராட்டைப் பெறப் போகின்றன.
தனுசு ராசிபலன்
சவால்களை ஏற்றுக்கொண்டு, உங்களிடத்திலுள்ள மனோதிடத்தை வரவழையுங்கள். அப்போது, கடினமான பணிகளைச் செய்வதிலிருந்து நீங்கள் விலகமாட்டீர்கள். உங்களுக்குத் தேவைப்படும் போது, குடும்பத்தினரும், நண்பர்களும் உதவுவார்கள். நீங்கள் உங்களது உள்ளக் கிடக்கைகளை அங்கலாய்கும் போது, அவர்கள் உங்கள் பக்கமாக இருப்பார்கள். ஏதேனும் ஒன்றில் சிக்கிக்கொண்டதாக உணரும் போது, உங்கள் அகம்பாவத்தை விடுத்து, உதவி கேட்க தயாராக இருங்கள்.
மகரம் ராசிபலன்
இன்று, உங்களுக்கு சில பின்னடைவுகள் ஏற்படும். உங்களுக்கு நண்பர்கள் உதவி செய்வார்கள். நீங்கள் விரும்பாவிட்டாலும் அன்பாகவும், உற்சாகமூட்டும் வார்த்தைகளைப் பேசுவதையும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் வாழ்க்கையின் பல சூழல்களில் உடனடி முன்னேற்றத்தைக் காண இப்போது நேரம் சாதகமாக இருக்கிறது. மாற்றங்களுக்கு ஏற்ப மாற்றிக் கொள்ள வெட்கப்பட வேண்டாம். உங்களுக்கு சவால்களை முறியடிக்கும் சக்தி உங்களுக்கு இருப்பதால், அதிகமாக நன்மைகளே ஏற்படும். நீங்கள் அதிகமாகப் பேசாத குடும்பத்தினர் மற்றும் நண்பரிடம் பேசி சமாதானமாகச் செல்லுங்கள். இது உங்கள் நேர்மறை எண்ணங்களை அதிகரிக்க உதவும்.
கும்பம் ராசிபலன்
தீர்மானம் செய்வது ஒரு தவறான அணுகுமுறையாகும். நீங்கள் அதை ஒதுக்கி வைக்க வேண்டும். சந்தேகத்தின் பலனை நீங்கள் மக்களுக்கு வழங்க வேண்டும். சில புதிய வாய்ப்புகள் உங்களை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. உங்கள் வாழ்க்கையில், சில வண்ணங்களைக் கொண்டு வருவதற்கான அற்புதமான வழியாக இது இருக்கலாம். இந்த புதிய வாய்ப்புடன் வரும் சவால்களை எதிர்கொள்ளத் தயாராக இருங்கள். இந்த பாதை எளிதானதாக இருக்காது, ஆனால் இந்த பாதையில் சென்றால் விரைவில் வெற்றி கிடைக்கும்.
மீனம் ராசிபலன்
உங்கள் பணப்பையினை மிகவும் கவனமாக பாதுகாக்க வேண்டிய தருணம் இதுவாகும். இல்லையென்றால், நீங்கள் தூங்கும் போது, அதன் கனமானது குறைந்துவிடும். செலவு செய்யும் விஷயத்தில் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். மனதின் உள்ளார்ந்த ஆசைகள் காரணமாக பொருட்கள் வாங்குவதைத் தவிருங்கள். இல்லையென்றால், முன்னெப்போதையும் விட இப்போது வருந்துவீர்கள். உங்கள் குடும்பத்தினரும் நண்பர்களும் உங்களை சார்ந்தே இருப்பார்கள். மேலும், நீங்கள் ஒருபோதும் நம்பிக்கையற்றவராக உணரக்கூடாது. ஏனென்றால், கடினமான காலங்கள் தான், எப்போதும் சிறந்த நாட்களுக்கு வழிவகுக்கும். இன்று உங்களது எதிர்மறை அணுகுமுறையை ஒதுக்கி வைத்துவிட்டு, நல்ல விஷயங்களை மட்டும் நம்புங்கள்.
0 Comments