இந்த வங்கி கணக்குகள் நாளை முதல் (ஜன.1) செயல்படாது..... ரிசர்வ் வங்கி அறிவிப்பு

 


இந்தியாவின் முதன்மையான வங்கி ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. இந்த விதிமுறைகளின் படி மூன்று வங்கி கணக்குகள் ஆய்வு செய்யப்பட்டு மூடப்பட உள்ளன. இந்த விதிமுறைகள் ஜனவரி 1, 2025 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்படும் என கூறப்படுகிறது. இதன்மூலம் பல ஆண்டுகளாக குழப்பமான வங்கி கணக்குகளை மூடுவதன் மூலம் வங்கிக்கு சவாலான பணிகள் குறைக்கப்படுகிறது. இதனால் இந்திய ரிசர்வ் வங்கி இந்த முறையை மேற்கொண்டு உள்ளது.

முதலாவதாக நீண்ட ஆண்டுகள் செயல்படுத்தப்படாத வங்கி கணக்குகள்(dormant account) இந்த கணக்குகளில் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் எந்த பண பரிவர்த்தனையும் நடைபெறாமல் இருப்பது செயலற்ற வங்கிக் கணக்காக கருதப்படும். இந்த வகையான கணக்கு மூடப்படுகிறது. இதனைத் தொடர்ந்து இன் ஆக்டிவ் வங்கி கணக்கு (inactive account) ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு எந்தவித நடவடிக்கையுமே இந்த வங்கி கணக்கில் செயல்படாமல் இருப்பது.

இந்த வகையான வங்கி கணக்கு மூடப்படுவதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து ஜீரோ பேலன்ஸ் அக்கௌன்ட் (zero balance account) இந்த வகையான வங்கிக் கணக்கில் எந்தவித பணமும் நீண்ட காலமாக டெபாசிட் செய்யாமல் இருப்பது. இதன் இருப்பு தொகை பூஜ்ஜியமாக இருக்கும். இந்த வகையான வங்கிக் கணக்கும் மூடப்படும் அல்லது குறிப்பிட்ட தொகை இருப்புப் பணமாக டெபாசிட் செய்ய அறிவுறுத்தப்படலாம்.

Post a Comment

0 Comments