அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம்..... சாப்பாடு செலவு மட்டும் ரூ.1 கோடி..?

 


அதிமுக கட்சியின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் ஏற்கனவே அவசர செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 9 தீர்மானங்களுடன் சேர்த்து மொத்தம் 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் பொதுக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் 2523 பேரும், சிறப்பு அழைப்பாளர்கள் 1000 பேரும் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த நிலையில் அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு வரும் உறுப்பினர்களுக்கு காலை மதிய உணவுக்கு மட்டும் 1 கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மதிய உணவிற்கு மட்டன் பிரியாணி, சிக்கன் ரோஸ்ட், மீன் வருவல், முட்டை மசாலா என ஒரு நபருக்கு மட்டுமே 900 ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ளது.

அசைவ உணவில் மட்டன் பிரியாணி, சிக்கன் 65, மீன் வறுவல், முட்டை மசாலா, வெள்ளை சாதம், ரசம் தயிர் பரிமாறப்பட்டுள்ளது. சைவ விருந்தில் தம்ரூத் அல்வா, பருப்பு வடை, அப்பளம், ஊறுகாய், மோர் மிளகாய், சாம்பார், வத்தக்குழம்பு, தக்காளி ரசம், முட்டைக்கோஸ், பீன்ஸ் பொரியல், புடலங்காய் கூட்டு, வெஜ் பிரியாணி, தயிர் பச்சடி, வெள்ளை சாதம், உருளைக்கிழங்கு பொரியல், தயிர், பருப்பு பாயாசம் பரிமாறப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments