இன்னும் 15 வருடங்களுக்கு… காங்கிரஸ் எதிர்க்கட்சி தான்...... கார்கேவுக்கு அமித்ஷா பதிலடி.......

 


மாநிலங்களவையில் நேற்று அரசியலமைப்பு மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார். அவர் கூறியதாவது, அம்பேத்கர்.. அம்பேத்கர்.. அம்பேத்கர்.. என முழக்கம் இடுவது இப்போது பேஷன் ஆகிவிட்டது என்றும், இதற்கு பதிலாக அவர் கடவுளின் பெயரை கூறியிருந்தால் சொர்க்கத்தில் ஆவது அவருக்கு இடம் கிடைக்கும் என்றும் பேசினார். இதற்கு எதிர்கட்சிகள் கண்டனம் தெரிவித்தது. இதுகுறித்து  காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவரான மல்லிகார்ஜுன கார்கே பேசினார். அப்போது அவர் கூறியதாவது, பிரதமர் மோடிக்கு அம்பேத்கர் மீது மரியாதை இருந்தால் அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும்.

அவர் அமைச்சரவையில் நீடிப்பதற்கு உரிமை இல்லை என்று கூறினார். இதற்கு பதில் அளித்த அமித்ஷா கூறியதாவது, மல்லிகார்ஜுன என்னுடைய ராஜினாமாவை கேட்கிறார். நான் பதவியில் இருந்து விலகுவது அவருக்கு மகிழ்ச்சி அளிக்கும் என்றால், நான் ராஜினாமா செய்ய தயார். ஆனால் என்னுடைய பதவி விலகல்  அவருடைய பிரச்சனையை தீர்க்காது, இன்னும் 15 வருடம் அவர் எதிர்க்கட்சியாக இருக்க வேண்டும். என்னுடைய ராஜினாமா கடிதத்தால் எந்த ஒரு மாற்றமும் நடக்காது, நான் பேசியதை திரித்து கூறியதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments