தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. ஏற்கனவே பெஞ்சல் புயல் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது. புயல் கரையைக் கடந்த நிலையிலும் மழையும் தாக்கம் குறையவில்லை. விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர், கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி உட்பட 10 மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் தமிழ்நாட்டில் இன்று 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி திருப்பத்தூர், பெரம்பலூர், திருச்சி, மதுரை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, நீலகிரி, கோவை, கரூர், நாமக்கல், சேலம், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் சென்னையிலும் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments