கடையநல்லூர் மதினா நகர் நூருல் ஹுதா மகளிர் அரபிக் கல்லூரியின் 14 வது ஆண்டு ஆலிமா பட்டமளிப்பு விழா .மௌலானா ஏ.ஏ ஹிதாயத்துல்லாஹ் ஆலிம் ரஹ்மானி தலைமையில் நடந்தது குபா பள்ளிவாசல் இமாம் மவ்லவி ஷாகுல் ஹமீது மஹ்ழரி கிராஅத் ஓதினார். கல்லூரியின் பேராசிரியர் கே.எஸ் ரஹ்மத்துல்லாஹ் மிஸ்பாஹி வரவேற்புரை ஆற்றினார். கவிஞர் மாலி கவிதை வாசித்தார். சென்னை அசோக் நகர் ஏ எம் சி ஜூம்ஆ பள்ளிவாசல் இமாம் கே எம் ஹாஜா முகைதீன் ஆலிம் உமரி மவ்லவி பீர் முஹம்மது மிஸ்பாஹி, பேட்டை காதர் மைதீன் குத்பா பள்ளிவாசல் இமாம் மவ்லவி ஷாகுல் ஹமீது வாஹிதி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
பைஜுல் அன்வார் அரபிக் கல்லூரி முதல்வர் மௌலானா ஏ.ஒய் முஹ்யித்தீன் பைஜி ஹழ்ரத் சிறப்புரை ஆற்றினார். தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் தலைவர் மௌலானா பி.ஏ ஹாஜா முயீனுத்தீன் பாகவி பட்டமளிப்பு விழா பேருரை ஆற்றி பதினேழு மாணவிகளுக்கு ஆலிமா நூரிய்யா ஸனது வழங்கினார். கடையநல்லூர் வட்டார ஜமாஅத்துல் உலமா சபை செயலாளர் எம் செய்யது இப்ராஹிம் அன்வாரி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இறுதியில் கல்லூரி முதல்வர் மவ்லானா டி.எம் அப்துல் குத்தூஸ் மிஸ்பாஹி நன்றியுரை ஆற்றினார்.
கடையநல்லூர் வட்டார ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் மவ்லானா கே.ஏ அஹ்மது மீரான் ரியாஜி ஹழ்ரத் துஆவுடன் விழா நிறைவு பெற்றது. விழாவில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கடையநல்லூர் நகர தலைவர் நல்லாசிரியர் கே எம் செய்யது மசூது நகரச் செயலாளர் ஆசிரியர் ஏகே முஸ்தபா தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணைத்தலைவர் கே ஜே அப்துல்லா உலமாக்கள் அணி மாவட்ட துணை அமைப்பாளர் முகமது இப்ராஹிம் ஆலிம் எம்.ஏ.முஹம்மது இஸ்மாயில் பி. காதர் மைதீன் கல்லூரி பொருளாளர் எம் முகமது யூசுப் மூத்த பத்திரிக்கையாளர் புளியங்குடி சாகுல் ஹமீது மவ்லானா ஹஸன் கனி மிஸ்பாஹி, மவ்லானா அஹ்மது முஹ்யித்தீன் பைஜி,புளியங்குடி எஸ் என் காஜா முஹ்யித்தீன் பைஜி, முஹம்மது யஹ்யா மஹ்ழரி, மவ்லானா மின்னல் முஹம்மது முஸ்தபா நூரி, மவ்லானா டி.ஜி.எம் ரஹ்மத்துல்லாஹ் மிஸ்பாஹி, மவ்லானா அக்பர் அலி பைஜி, மவ்லானா எஸ்.எம் அக்பர் அலி பாஜில் மன்பஈ, மதீனா நகர் ஜும்ஆ பள்ளிவாசல் இமாம் முஹம்மது யூசுப் பைஜி, மவ்லானா முஹம்மது சுல்தான் மிஸ்பாஹி மற்றும் ஏராளமான உலமாக்கள் மற்றும் பொதுமக்கள் பட்டம் பெரும் மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
0 Comments