டார்லிங் நிறுவனத்தின் 149 வது கிளை திறப்பு விழா கும்மிடிப்பூண்டியில் நடைபெற்றது. டார்லிங் குழும தலைவர் லையன் எம்.வெங்கடசுப்பு தலைமையில் நடைபெற்ற இந்த துவக்க விழாவில் லாய்டு ஹார்வெல்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவன முதுநிலை பொது மேலாளர் வி.ஹரி பங்கேற்று கும்மிடிப்பூண்டியில் டார்லிங் நிறுவன கிளையை திறந்து வைத்தார்.
இந்த விழாவில் கும்மிடிப்பூண்டி வியாபாரிகள் சங்கத் தலைவர் புல்லட் கோவிந்தராஜ் தொழிலதிபர் அஜீத்குமார், கும்மிடிப்பூண்டி எச்எம்சி மருத்துவமனை துணைத் தலைவர் டாக்டர் ராணி அர்ஜுனன், பவர்லால் ஜுவல்லரி நிறுவனர் அசோக் சந்த், கும்மிடிப்பூண்டி டிஎஸ்பி ஜெயஸ்ரீ, மின்வாரிய உதவிப் பொறியாளர் எம்.சி.சிவக்குமார், தொழிலதிபர் ஆர்.எம்.எஸ்.பழனி செட்டியார் குடும்பத்தினர் ஆறுமுகம் செட்டியார் பங்கேற்று குத்துவிளக்கேற்றினர்.
விழா ஏற்பாடுகளை டார்லிங் குழும இயக்குனர்கள் ஆர்.நவராஜ முருகன், வி.முரளி, வி.நவீன், ஆர்.பாலகிருஷ்ணன் ஹரிகிருஷ்ணன் உள்ளிட்டோர் முன் நின்று சிறப்பாக நடத்தினர். விழா முடிவில் டார்லிங் நிறுவன கும்மிடிப்பூண்டி கிளை மேலாளர் சந்திரமௌலி நன்றி கூறினார்.
0 Comments