திருவள்ளூர் மாவட்டம் காட்டூரில் 13 ஆம் ஆண்டு சர்வதேச மாற்றுத்திறனாளர்கள் தின விழாவில் மாற்றுத்திறனார்களின் சாகசங்களை கண்டு வியந்த காவல்துறையினர் கண்ணீர் மல்க பாராட்டு

 


திருவள்ளூர் மாவட்டம்,மீஞ்சூர் அடுத்த காட்டூரில் 13 ஆம் ஆண்டு சர்வதேச மாற்றுத்திறனாளர்கள் தினம் சமுதாயக்கூடத்தில் நடைபெற்றது. மீஞ்சூர் ஒன்றிய மலரும் மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு, வசந்தம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு மற்றும் சென்னை சமூக சேவை சங்கம் இணைந்து நடத்திய இந்த நிகழ்ச்சியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டனர். இதில் சிலர் தங்கள் கலைத்திறமைகளை வெளிப்படுத்தினர்.

 இந்த கலை நிகழ்ச்சிகளை விழாவில் கலந்து கொண்ட திருப்பாலைவனம் காவல்துறை ஆய்வாளர் காளிராஜ்,காட்டூர் காவல் உதவி ஆய்வாளர் உமாபதி உள்ளிட்டோர் பார்த்தபின் மனம் நெகிழ்ந்து மாற்றுத்திறனாளர்களை கட்டி அணைத்து ஆரத் தழுவி கண்ணீருடன் தங்கள் பாராட்டுகளை தெரிவித்து கொண்டனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒன்றிய கவுன்சிலர் சுமித்ரா குமார் மற்றும் செல்வழகி எர்ணாவூரான் ஆகியோர் மாற்றுத்திறனாளர்களின் வேதனைகளையும் அவர்கள் படும் பாடுகளையும் கண்டு கண் கலங்கினர். மிக நெகிழ்ச்சியுடன் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற மாற்றுத்திறனாளர்களுக்கு பரிசுகளும், ஊக்கத் தொகைகளும் வழங்கப்பட்டது.

 மீஞ்சூர் ஒன்றிய மலரும் மாற்றுத் திறனாளிகள் கூட்டமைப்பு தலைவர் வேலாயுதம் வரவேற்ற இந்த நிகழ்ச்சியில் வசந்தம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பின் தலைவர் லிவிங்ஸ்டன் தலைமை வகித்தார். நிகழ்ச்சியினை இக்கூட்டமைப்புகளின் ஒருங்கிணைப்பாளர் சூசைராஜ் ஒருங்கிணைத்தார். கூட்டமைப்பு நிர்வாகிகள் ஆனந்திபச்சையம்மாள்சையத் ஷெரிப்,அமுல்,ரூபா,ஹேமாவதி,அன்சர் பாஷா,வாசுகி,மெய்யப்பன், பிரபு ஆறுமுகம் உள்ளிட்டோர்  முன்னிலை வகித்தனர்.திருவள்ளூர் சென்னை மீஞ்சூர் கும்மிடிப்பூண்டி எல்லாபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து மாற்றுதிறனாளர்கள் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments