பாவூர்சத்திரம் அவ்வையார் மகளிர்பள்ளியில் ரூ.10 லட்சத்தில் கலையரங்கம் அமைக்கும் பணியினை யூனியன் சேர்மன் காவேரிசீனித்துரை தொடங்கி வைத்தார்.
பாவூர்சத்திரம் அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் புதிய கலையரங்கம் கட்டப்படவுள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று (திங்கள்) நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியை ஜான்சிராணி தலைமை வகித்தார். மாவட்ட கவுன்சிலர் சாக்ரடீஸ், ஊராட்சி மன்ற தலைவர் ராஜ்குமார் முன்னிலை வகித்தனர். உதவி தலைமை ஆசிரியை ஜெகதா வரவேற்றார். கீழப்பாவூர் யூனியன் சேர்மன் காவேரி சீனித்துரை கலந்து கொண்டு, அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் கீழப்பாவூர் ஒன்றிய திமுக செயலாளர்சீனித்துரை, ஒன்றிய கவுன்சிலர் தர்மராஜ், அறங்காவலர் குழு உறுப்பினர் காலசாமி, திமுக நிர்வாகிகள் டால்டன், கபில்தேவதாஸ், பெரியார் திலீபன், குருசிங், தங்கப்பாண்டியன், செல்வராஜ், பள்ளி மேலாண்மை குழு தலைவர் வடக்குவாச்செல்வி மற்றும் உறுப்பினர், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். முடிவில் உதவி தலைமை ஆசிரியர் சிவபார்வதிநாதன் நன்றி கூறினார்.
0 Comments