மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள திருவாவடுதுறை பள்ளிவாசல் தெருவில் ஜாகிர் உசைன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சென்னையில் வேலை பார்க்கும் பட்டதாரி இளம் பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. அவர் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி அந்த பெண்ணிடம் இருந்து 2 லட்ச ரூபாய் பணம் மற்றும் 14 போன் தங்க நகைகளை வாங்கியுள்ளார்.
மேலும் கட்டாயப்படுத்தி இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து அதனை செல்போனில் போட்டோ மற்றும் வீடியோ எடுத்துள்ளார். இதனையடுத்து ஆபாச போட்டோ மற்றும் வீடியோக்களை சோசியல் மீடியாவில் வெளியிடுவதாக மிரட்டி பலமுறை இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதனால் இளம்பெண் கர்ப்பமானார். இதனை தொடர்ந்து ஜாகிர் உசேன் இளம்பெண்ணை வீட்டிற்கு வரவழைத்து கட்டாய கருக்கலைப்பு செய்ததாக தெரிகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட இளம் பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் தெரியவந்தது.
ஜாகிர் உசைன் திருமண ஆசை காட்டி பத்துக்கும் மேற்பட்ட இளம் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் அவர்களோடு உல்லாசமாக இருந்த ஆபாச வீடியோ மற்றும் போட்டோக்களை வெளியிடுவதாக மிரட்டி பணம் நகையை பறித்ததாகவும் கூறப்படுகிறது. இந்த விவகாரம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
0 Comments