பிரேசிலின் கிராமடோவில் சிறிய ரக விமானம் ஒன்று விமானியின் கட்டுப்பாட்டை இழந்து நகரத்தின் மத்தியில் இருந்த கட்டிடங்களின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இது குறித்த தகவல் அறிந்து அந்த வருடத்திற்கு விரைந்த மீட்பு குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். ஆனால் விமானத்தில் இருந்த பயணிகள் 10 பேரும் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் விபத்தினால் ஏற்பட்ட கரும்புகையினால் மூச்சு திணறல் ஏற்பட்டு 15 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
0 Comments